தன்னை உணரும் நிலை
A matter of self realisation!
முதல் தேடல்!
தேடலின் இருதியாய் இங்கு!
தனக்கான தேடலில் காலத்தின் போக்கில் தன்னை தொலைத்தவர்களே இங்கு அதிகம். தேடல் ஒருபக்கம் இருக்க காலத்தின் சுழ்ச்சியால் அதன் சுழற்சியில் தலைச்சுற்றிப்போய் பாதை நினைவிருந்தும் தன்பாதைமாறி பயணம் மாறி நின்ற மிகச்சாதாரண மனிதர்களே இந்த நடுத்தர வர்க்கம். இது பொருளாதார ரீதியயை மட்டும் வைத்து பிண்ணனி படுத்த இயலாது.
இதில் காலப்போக்கில் கவனிக்க தவறிய சில சிறு செயல்கள். எனினும், இதன் தாக்கமும் வீரியமும் அதிகம். தகவல் தொடர்பு அதிகப்படுத்தப்பட்ட இந்த கால மாற்றத்தினால் பேச்சுகளும், பேசுப்பொருள்களுமே இங்கு அதிகம். இதனால் பார்வையாளர்களாக அதிகப்படுத்தி சந்தைப்படுத்தப்பட்டோமே தவிற அந்த பேச்சின் தாக்கம் ஒரு சிங்கிள் கிளிக்கிள் மறந்துவிடுகிறோம். இந்த மாற்றத்தினை உணர நேரமில்லாத நாம் ''கவனித்தல்'' என்ற சொல்லின் அர்த்தம் மதிப்பிழக்கச்செய்திருக்கிறோம். இதனால் ஏற்படும் உறவு இழப்புகளையும் நாம் உணரவில்லை. ஒரு கருத்தை பகிருவதில் பெருமை கொள்ளும் நாம் உணர மறுப்பது, பகிரும் கருத்து ஒருவருக்கு தேவையா இல்லையா என்பதை? இதைச்சுருங்கக்கூறிடில் எல்லா வகை நோய்களுக்கும் ஒரே மருந்தை உபயோகிப்பதுப்போல்.
முன்பெலாம் தூர உறவுகளில் இருந்து வருகிற கடிதங்களுக்கு, காகிதமாக இருந்தபோதிலும் உணர்வுகள் இருந்தது. அந்த உணர்வுகளும் தவறாமல் மாதா மாதம் அது வரும் தேதியிலும், அதற்காகக்காத்திருப்பவர்கள் மௌனத்திலும் உணரமுடியும். அதில் ஒரு நோக்கம் இருக்கும், யாரையென்ற குறிப்பு இருக்கும். கடிதமாக இருந்தாலும் அதற்கான பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளின் கவணிப்பில் தெரியும் அந்த உறவில், நபரில் அவர் வைத்திலுள்ள அக்கறை.
இதனால் என்னை தெரிந்த உறவுகளுக்கும், தெரியாத நட்புகளுக்கும் எனது எண்ணங்களின் விளைவாக இந்த புதிய பயணம்!